» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா-பாக். இடையே நல்லுறவு ஏற்படாது : இம்ரான்கான்
செவ்வாய் 22, நவம்பர் 2022 4:23:57 PM (IST)
பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார்.

ஆனால் பா.ஜனதா அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்சினைகளில் தேசியவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பில்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது.
எங்களை பொறுத்த வரை காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பாதையை அவர்கள் (இந்தியா) வைத்திருக்க வேண்டும் என்பதுதான். 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது.நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன்.
உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறந்த வழி அனைவருடனும் நல்லுறவை வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் மக்களுக்கு உதவ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:20:56 AM (IST)

காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் : ஜஸ்டின் ட்ரூடோ
வியாழன் 30, நவம்பர் 2023 5:10:21 PM (IST)

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 10:52:08 AM (IST)

தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!
புதன் 29, நவம்பர் 2023 5:18:37 PM (IST)

நியூசிலாந்து பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை :புதிய பிரதமர் லக்சன் உறுதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:31:44 AM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் வரவேற்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:17:45 AM (IST)
