» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷிய ஏவுகணை தாக்குதல்: உக்ரைனின் தொழிலதிபர், மனைவி உயிரிழப்பு!

திங்கள் 1, ஆகஸ்ட் 2022 11:08:32 AM (IST)ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் ஹீரோ விருது வாங்கிய பெரும் தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 5 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் கோதுமை உள்ளிட்ட தானிய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இந்த சூழலில், இரு நாடுகள் இடையேயான போரால் உணவு பொருட்களின் விலைவாசி உலக அளவில் உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் தெற்கு நகரான மிகோலைவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில், உக்ரைனின் ஹீரோ விருது வாங்கியுள்ள அந்நாட்டின் பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை (வயது 74) மற்றும் அவரது மனைவி ரெய்சா ஆகிய இருவரும் வீட்டில் இருக்கும்போது, ரஷிய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர்.

ஒலெக்சி, தானிய ஏற்றுமதிக்கான நிபுலான் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். இதன் வழியே உலக நாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்து உள்ளார். எனினும், மிகோலைவ் நகர மேயர் அலெக்சாண்டர் சென்கெவிச் கூறும்போது, ரஷியாவின் மிக பெரிய தாக்குதல் இது என குறிப்பிட்டார். 

அதிபரின் ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறும்போது, உள்நோக்கத்துடனேயே தொழிலதிபரை இலக்காக கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. தொழிலதிபரின் படுக்கையறையை ஏவுகணைகளில் ஒன்று தாக்கி உள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது, இது திட்டமிட்ட தாக்குதல் என சந்தேகமின்றி தெரிய வருகிறது என கூறியுள்ளார். ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் ஓட்டல் ஒன்று, விளையாட்டு வளாகம், 2 பள்ளி கூடங்கள் மற்றும் பல வீடுகளும் சேதமடைந்து உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory