» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
செவ்வாய் 18, ஜனவரி 2022 4:45:09 PM (IST)
ஐக்கிய அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 33 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா பரவலை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. சில நாடுகள் உருமாறிய கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசிகளையும் அறிமுகம் செய்துள்ளன. இந்நிலையில் அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். அதுமட்டும் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களாக கருத்தப்படுவர். அவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி உண்டு. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீனாவில் 133 பேரின் சாவுக்கு விமானியே காரணம்: கருப்பு பெட்டி மூலம் கிடைத்த பகீர் தகவல்..!!
புதன் 18, மே 2022 4:49:04 PM (IST)

சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை: கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
புதன் 18, மே 2022 4:22:32 PM (IST)

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செவ்வாய் 17, மே 2022 5:46:50 PM (IST)

பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவு
செவ்வாய் 17, மே 2022 4:55:18 PM (IST)

கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. இந்தியாவுக்கு சீனா ஆதரவு - ஜி7 நாடுகள் மீது விமர்சனம்!
திங்கள் 16, மே 2022 5:47:02 PM (IST)

நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி!
திங்கள் 16, மே 2022 11:41:26 AM (IST)
