» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க திட்டம்: நிரந்தரமாக தங்க வெளிநாட்டினருக்கு அனுமதி!

ஞாயிறு 16, ஜனவரி 2022 10:31:47 AM (IST)

அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிரந்தர குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்குவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி நேற்று கூறியதாவது. அதிக முதலீடுகளை வழங்கும் வெளிநாட்டு மக்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது. இது,பாகிஸ்தானில்  வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. ஆப்கானிஸ்தானை விட்டு வேறு நாடுகளுக்கு வெளியேறிய பணக்காரர்கள், பாகிஸ்தானில்  முதலீடு செய்து, இங்கு நிரந்தரமாக தங்கலாம்.

கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் பாகிஸ்தானில்  உள்ள மத வழிபாட்டு தளங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். பாகிஸ்தானிற்கு குடிபெயர்ந்து, இங்கு தொழிற்சாலைகளை கட்டமைக்க விரும்பும் சீன நாட்டினர், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory