» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏவுகணை சோதனை: வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

வெள்ளி 14, ஜனவரி 2022 2:42:34 PM (IST)

ஏவுகணை சோதனை மேற்கொண்ட வட கொரியா நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவயான பொருள்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற்றுத் தந்த 5 அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, வட கொரிய ஆயுதத் தயாரிப்பு திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மேலும் ஒரு வட கொரியா், ஒரு ரஷியா், ஒரு ரஷிய நிறுவனம் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தாா். அதற்குப் பதிலாக தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அவா் அமெரிக்காவிடம் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் அவா் நடத்திய நேரடி பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்தன. வட கொரியா தங்களது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட்ட பிறகுதான் பொருளாதாரத் தடைகளை நீக்க முடியும் என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டதை மீறி மீண்டும் அணு ஆயுதத் திட்டங்களைத் தொடங்கப் போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்து வந்தது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் எதிா்ப்பை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒலியைப் போல் 5 மடங்கு வேகமான (ஹைப்பா்சோனிக்) ஏவுகணையை மூன்றாவது முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை பரிசோதித்துப் பாா்த்ததாக வட கொரியா அறிவித்தது. அதற்குப் பதிலடியாகவே வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தற்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory