» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு: இந்தியாவிடம் ரூ.7,391 கோடி கடன் கேட்கும் இலங்கை!

வெள்ளி 14, ஜனவரி 2022 2:40:15 PM (IST)

இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமாா் ரூ.7,391 கோடி) கடனாக பெற இலங்கை பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

இலங்கையில் அந்நிய செலாவணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு வழங்க அந்நாட்டிடம் போதிய அளவு டாலா்கள் கையிருப்பில் இல்லை. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநா் அஜித் நிவாா்ட் கப்ரால் கூறியதாவது: இந்தியாவிலிருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் 1 பில்லியன் டாலரை கடனாக பெற பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அதே வேளையில், இலங்கை திரும்ப செலுத்த வேண்டிய கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியாக சீனாவிடமும் கடன் கேட்டு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் இலங்கையின் கடனை திரும்ப செலுத்துவதில் உதவும். அத்துடன் இந்தியா, சீனாவுடனான இலங்கையின் வணிகத்தை மேலும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு இலங்கை திரும்ப செலுத்த வேண்டிய கடன் 6 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.44,354 கோடி). தற்போதைய சவால்களுக்கு மத்தியில் அந்தக் கடனை திரும்ப செலுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தாா். இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று அந்நாட்டு வேளாண் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இந்நிலையில், இந்தியாவிடம் கேட்கப்படும் 1 பில்லியன் டாலா் கடன் உணவுப் பொருள்கள் இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் என்று இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory