» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை பூஸ்டராக பயன்படுத்துவது பலன் தராது: உலக சுகாதார மையம்

புதன் 12, ஜனவரி 2022 5:16:00 PM (IST)

பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளையே மீண்டும் பயன்படுத்துவது பலன் தராது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதிவேகமாக கரோனா வைரஸ் பரவி வருகிறது.  இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 3.59 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர கரோனா வைரசின் உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் வைரஸ்களும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக நாடுகள் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி வந்தன. ஆனால் கரோனா வைரஸ் உருமாருமாறி மக்களை பாதிப்பதால் பல நாடுகள் 3-வது தவணை தடுப்பூசியை, பூஸ்டர் தடுப்பூசி என செலுத்தி வருகின்றன. 

இந்தியாவிலும் முதியோர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உருமாறிய கரோனா வைரஸ்களை தடுக்க 4-வது தவணை தடுப்பூசியை அறிமுகம் செய்வது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றன. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே 2 தவணை செலுத்திய தடுப்பூசியையே 3-வது தவணையாகவும் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளையே மீண்டும் பயன்படுத்துவது  பலன் தராது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து ஆராயும் உலக சுகாதார மையத்தின் நிபுணர்கள் கூறியதாவது: ஏற்கனவே செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தும் திட்டம் உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது.

முதற்கட்ட தரவுகள் தற்போது பயனில் உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தீர்க்கமாக செயல்படவில்லை என கூறுகின்றன. இதனால் தான் ஒமைக்ரான் காட்டுத்தீயை போல பரவி வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஒமைக்ரான் பாதிக்கிறது.  நோய் தொற்றுக்கு ஆளானவர்களை தீவிர பாதிப்பு, இறப்பில் இருந்து காப்பாற்றுவது மட்டும் இல்லாமல், நோய் தொற்று முதலில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதையே தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தேவை. அவற்றை தான் நாம் உருவாக்க வேண்டும்.

அதுபோன்ற தடுப்பூசிகள் நமக்கு கிடைக்கும் வரை,  தற்போதைய கரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும், அவை ஒமைக்ரான் மற்றும் எதிர்கால மாறுபாடுகளுக்கு எதிராக உலக சுகாதார மையம் பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory