» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு : செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

வெள்ளி 27, ஆகஸ்ட் 2021 4:20:22 PM (IST)



இலங்கையில் கரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க ஆகஸ்ட் -30 வரை  பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாலும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் வரும் செப்டம்பர் - 6 ஆம்  தேதி வரை நாடுமுழுவதும் பொது முடக்கம் தொடரும் என அந்நாட்டு அதிபா்  கோத்தபய ராஜபட்ச அறிவித்திருகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,597 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் 209 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,12,370 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,157 ஆகவும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory