» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மலேசிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றார்

ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 10:01:27 AM (IST)

கோலாலம்பூரில் அரண்மனையில் மன்னரின் முன்னிலையில் இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிரதமராக பதவி வகித்து வந்த முகைதின் யாசின், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார். இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் முகைதின் யாசின் தலைமையிலான அரசில் துணை பிரதமராக இருந்து வந்த இஸ்மாயில் சப்ரி யாகூப், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, 61 வயதான இஸ்மாயில் சப்ரியை பிரதமராக நியமித்தார். இந்த நிலையில் நேற்று தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் மன்னரின் முன்னிலையில் இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இஸ்மாயில் சப்ரி முகைதின் யாசின் தலைமையிலான அரசில் ராணுவ மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பதும், அவர் ஐக்கிய மலாய் தேசிய கட்சியின் துணை தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1957-ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்டு வந்த ஐக்கிய மலாய் தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் பிரதமராகி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory