» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தலிபான் அரசை இலங்கை ஒருபோதும் அங்கீகரிக்க கூடாது: ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை

சனி 21, ஆகஸ்ட் 2021 12:27:14 PM (IST)

ஆப்கான் தலிபான் அரசை இலங்கை ஒருபோதும் அங்கீகரிக்க கூடாது என்று இலங்கை முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் உலக நாடுகளுக்கெல்லாம் பயங்கரவாத குழுக்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறிவிடும் என்று உலகில் உள்ள ஒவ்வொருவரும் அஞ்சுகின்றனர். உலகிலுள்ள அரசுகளையும் மக்களையும் மிரட்டி அச்சுறுத்தும் யாரையும் நாம் மன்னிக்க கூடாது குர்ஆனை தவறாக அர்த்தம் செய்து கொண்டு தலிபான்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மரபுவழி இஸ்லாமிய அரசுக்கும் மக்களுக்கும் தலிபான்கள் அபாயமாக விளங்குகின்றார்கள். இந்தியத் துணைக்கண்ட பகுதியில் பயங்கரவாதத்துக்கு இலங்கை அரசு கூட்டாளியாக மாறக் கூடாது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசை அங்கீகாரம் செய்வதற்கு நியாயமான காரணம் எதுவும் கிடையாது என்று விக்கிரமசிங்கே கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory