» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி 7 மாநாடு: அமெரிக்கா - பிரிட்டன் முடிவு

புதன் 18, ஆகஸ்ட் 2021 4:42:24 PM (IST)



ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஜி 7  நாடுகளின் மாநாட்டை கூட்டுவது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடேனும் பிரிட்டன் பிரதமர் ஜான்சனும் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த வாரம் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் ஆப்கானிஸ்தான் விஷயத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பது அவசியம் என்றும் கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி மற்ற நாடுகளுக்கு சேர்ந்துள்ள அகதிகளுக்கு மனிதாபிமான உதவி வழங்குவது குறித்தும் ஆப்கானினில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது குறித்தும் இரு நாடுகளின் தலைவர்களும் விவாதிப்பது அவசியம் என்று கருதுவதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பிடேன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன்பு குடியரசுக் கட்சி அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவது என்று முடிவு செய்தார். ட்ரம்ப் முடிவின்படி அமெரிக்கப் படைகளை ஆப்கானில் இருந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ வாபஸ் பெற்றுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory