» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு: நிரவ் மோடிக்கு இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அனுமதி

திங்கள் 9, ஆகஸ்ட் 2021 5:46:49 PM (IST)

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர நிரவ் மோடிக்கு இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக பணமோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுதவிர வங்கிகளில் இவர் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி செலுத்தவில்லை. சி.பி.ஐ. விசாரணையை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார்.   சி.பி.ஐ. வேண்டுகோளின்பேரில், அங்கு கைது செய்யப்பட்டார். 

லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர்நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த  உத்தரவிட்டது.  

இந்த வழக்கில் அவர் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது  இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம். அவர் தற்கொலை செய்துகொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.  இந்த வாதத்தை ஏற்ற ஐகோர்ட்,  நிரவ் மோடியை  இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory