» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்து: 30 பயணிகள் உயிரிழப்பு - 100பேர் படுகாயம்!

திங்கள் 7, ஜூன் 2021 4:30:57 PM (IST)பாகிஸ்தானில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. ஏற்கனவே தடம்புரண்டு விபத்துக்குள்ளான மில்லத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில், 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்து கவிழ்ந்தன.  ரயில் விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கவிழ்ந்த ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்பது கடும் சவாலாக உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. 

இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏராளமானோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரதமர் இம்ரான் கான், ரயில்வே மந்திரியை உடனே அந்த பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory