» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை - ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிப்பு

செவ்வாய் 27, ஏப்ரல் 2021 12:37:21 PM (IST)

இந்திய விமானங்களுக்கு  ஆஸ்திரேலியாவில் மே 15 வரை தடை விதிக்கப்படுவதாக பிரதமர்  ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.இந்தியாவில் கரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் 

மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15 வரை தடை விதித்து பிரதமர்  ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsNalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory