» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டம் எதிரொலி : பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

வெள்ளி 16, ஏப்ரல் 2021 3:44:03 PM (IST)பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘சாா்லி ஹெப்டோ’ வார இதழில் மதக் கடவுளை கேலி செய்யும் வகையிலான சா்ச்சைக்குரிய கேலிச் சித்திரத்தைக் கண்டித்து உலகின் இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கான பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியினர் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் பிரான்ஸ் தூதரை வெளியேற்ற வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படும் சூழலைத் தடுக்கும் விதமாக இஸ்லாமாபாத் உள்பட நாடு முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானில் முகநூல், சுட்டுரை (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. 


மக்கள் கருத்து

இந்தியன்Apr 16, 2021 - 09:32:55 PM | Posted IP 173.2*****

அவன் போலி கடவுளை மட்டும்தான் கேலி பண்ணுறான் உங்க மக்களை அல்ல ஆனால் கடவுள் பார்த்துக்கொள்வார், இவனுங்களுக்கு வேற வேலை கிடையாது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam


Thalir Products
Thoothukudi Business Directory