» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!

சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)



முஸ்​லிம் பெண்​கள் தொழுகைக்​காக மசூதிகளுக்குச் செல்​வதற்​குத் தடை​யில்​லை. அதே​நேரத்​தில், முஸ்​லிம் பெண்​கள் பிர​தான வாசல் வழி​யாக நுழைவதற்கோ அல்​லது ஆண்​களு​டன் எவ்​விதத் தடுப்​பும் இன்றி ஒன்​றாக அமர்ந்து தொழுகை நடத்​து​வதற்கோ உரிமை கோர முடி​யாது என்று அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் (ஏஐஎம்​பிஎல்​பி) உச்ச நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது.

சபரிமலை ஐயப்​பன் கோயிலுக்​குள் அனைத்து வயது பெண்​களும் நுழைய​லாம் என்ற 2018-ம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்​யக் கோரும் மனுக்​களை, உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான 9 நீதிப​தி​கள் கொண்ட அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த விசா​ரணை​யின் போது, ‘‘உண்​மைத் தன்​மை​யைத் தெளிவுபடுத்​திக் கொள்​ளக் கேட்​கிறோம். மசூ​திக்​குள் முஸ்​லிம் பெண்​கள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​கிறார்​களா?’’ என்று தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் கேட்​டார்.

அப்​போது, தலைமை நீதிப​தி​யின் கேள்விக்கு பதிலளித்த முஸ்​லிம் தனி​நபர் வாரி​யத்​தின் மூத்த வழக்​கறிஞர் எம்​.ஆர்.ஷம்​ஷாத் கூறிய​தாவது: முஸ்​லிம் பெண்​கள் மசூ​திக்​குள் நுழைவ​தில் இஸ்​லாமியப் பிரி​வினரிடையே எந்​தக் கருத்து வேறு​பாடும் இல்​லை. ஆனால், அங்கு பின்​பற்​றப்பட வேண்​டிய சில ஒழுங்​கு​முறை​கள், விதி​கள் உள்​ளன.

முஸ்​லிம் பெண்​கள் மசூ​திக்​குள் நுழைய​லாம் என்​றாலும், ஆண்​கள் செல்​லும் பிர​தான வாசல் வழி​யாகவே நுழைய வேண்​டும் என்​றோ, ஆண்​களுக்​கும் பெண்​களுக்​கும் இடையே தடுப்பு இருக்​கக் கூடாது என்றோ கட்​டாயப்​படுத்த முடி​யாது.

ஆண்​கள் மசூ​திக்​குச் சென்று தொழு​வது கடமை​யாக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், முஸ்​லிம் பெண்​களுக்கு வீட்​டில் இருந்து தொழு​வதே சிறந்​தது என்று கூறப்​பட்​டுள்​ளது. இதற்​குக் காரணம், ஆண்​கள் தொழுகை நடத்​தச் செல்​லும் போது குழந்​தைகளைப் பராமரிக்க பெண்​கள் வீட்​டில் இருக்க வேண்​டிய தேவை இருக்​கலாம் என்​ப​தாகும்.

‘‘பெண்​கள் மசூ​திக்கு வரு​வதைத் தடுக்க வேண்​டாம்’’ என்று இறை தூதர் முகமது நபியே கூறி​யுள்​ளார். பெண்​கள் மசூ​திக்கு வந்​தால் அவர்​களுக்கு உரிய அனு​மதி வழங்​கப்பட வேண்​டும், ஆனால் பாரம்​பரிய நடை​முறை​கள் மதிக்​கப்பட வேண்​டும். இவ்​வாறு வழக்​கறிஞர் ஷம்​ஷாத் தெரி​வித்​தார்.

மசூ​தி​களில் பெண்​கள் நுழைய அனு​மதி கோரி புனேவைச் சேர்ந்த யாஸ்​மின் ஜுபெர் அகமது பீர்​ஜாடே, அவரது கணவர் ஜுபெர் ஆகியோர் தாக்​கல் செய்த மனு​வின் மீதும் இந்த விசா​ரணை​யின் முடிவு பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனிடையே அரசி​யல் சாசன அமர்​வில் இடம்​பெற்​றுள்ள நீதிபதி அஹ்​சானுதீன் அமானுல்லா கூறும்​போது, ‘‘பெண்​கள் மசூ​திக்​குள் நுழைவது என்​பது ஆரம்​பத்​திலிருந்​தே, அதாவது முகமது நபி​யின் காலத்​திலிருந்தே நடை​முறை​யில் உள்ள ஒன்​றாகும். வீட்​டுப் பொறுப்​பு​கள் மற்​றும் குழந்​தைப் பராமரிப்பு கரு​தியே பெண்​களுக்கு அது கட்​டாய​மாக்​கப்​பட​வில்​லை’’ என்​றார்.

உச்ச நீதி​மன்​றத்​தின் இந்த அரசி​யல் சாசன அமர்​வில் நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, எம்​.எம்.சுந்​தரேஷ், அஹ்​சானுதீன் அமானுல்​லா, அரவிந்த் குமார், அகஸ்​டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்​னா பி. வரலே, ஆர்​. ம​காதேவன்​, ஜோய்​​மால்​யா ​பாக்​சி ஆகியோர்​ இடம்​பெற்​றுள்​ளனர்​. இந்​த வழக்​கின்​ வி​சா​ரணை அடுத்​த ​வாரம்​ தொடர்​ந்​து நடைபெறவுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory