» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)

பீகார் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான புதிய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
என்டிஏ மாநிலங்களவை எம்.பியாக தேர்வான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் கடந்த ஏப்ரல் 14 அன்று பீகார் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். பீகார் மாநிலத்தில் பொறுப்பேற்ற முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.
இதனிடையே அவர் தலைமையிலான புதிய அரசு மீது நேற்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒற்றுமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாம்ராட் சவுத்ரி முதலில் சமதா கட்சியிலும், பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலும் இருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்ராட் சவுத்ரி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)

யமுனையில் படகு சவாரி செய்ய உங்களுக்கு இருக்கிறதா? பிரதமருக்கு மமதா சவால்!
சனி 25, ஏப்ரல் 2026 3:58:40 PM (IST)

நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)

மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)

சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)

ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:09:32 PM (IST)







