» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:13:14 AM (IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை. மக்கள் இடையே பீதியை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 அமெரிக்க டாலரில் இருந்து 119 டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது.
ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. மக்கள் இடையே பீதியை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத ஒரே நாடு இந்தியா தான். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் எடுத்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)

யமுனையில் படகு சவாரி செய்ய உங்களுக்கு இருக்கிறதா? பிரதமருக்கு மமதா சவால்!
சனி 25, ஏப்ரல் 2026 3:58:40 PM (IST)

நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)

மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)

பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)

சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)








BabuApr 24, 2026 - 10:03:14 PM | Posted IP 104.2*****