» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ. 3,984.86 கோடி செலவில் 3வது ஏவுதளம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:35:04 PM (IST)

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ. 3,984.86 கோடி செலவில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தற்போது இருக்கும் ஏவுதளங்கள் 1000 டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது என்பதால், 3வது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 3,984.86 கோடி செலவில் இந்த ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. 90 மீட்டர் உயரமும் அதிகபட்சமாக 1,000 டன் எடையும் கொண்ட ராக்கெட்டுகளை ஏவும் திறனுடன் அமைக்கப்பட உள்ள இந்த ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளில் அதற்கான பணிகள் நிறைவடையும்' என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல் படுத்தப்படாது: முதல்வர் மமதா பானர்ஜி உறுதி
புதன் 9, ஏப்ரல் 2025 5:05:57 PM (IST)

அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் : ரகுராம் ராஜன் விளக்கம்!
புதன் 9, ஏப்ரல் 2025 11:52:35 AM (IST)

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 11:23:07 AM (IST)

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு : பினராயி விஜயன் வரவேற்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:39:11 PM (IST)

மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:56:59 AM (IST)

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 7 பேர் உயிரிழப்பு: போலி டாக்டர் கைது!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:09:54 AM (IST)
