» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 7 பேர் உயிரிழப்பு: போலி டாக்டர் கைது!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:09:54 AM (IST)
மத்தியப் பிரதேசத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.
மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி டாக்டரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் இருந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










