» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருவதால், பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பீகார் தலைமைச் செயலகத்தில், கடந்த டிச.15 அன்று நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதல்வர் நிதீஷ் குமார் வலுக்கட்டாயமாக விலக்கினார். பீகார் முதல்வரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், நிதீஷ் குமாரின் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பீகார் முதல்வருக்கு எதிராக சில சமூக விரோதிகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பாகிஸ்தானைச் சேர்ந்த நிழல் உலக தாதா ஒருவர் முதல்வர் நிதீஷ் குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், முக்கிய பிரமுகர்களை மட்டுமே அவர் அருகில் அனுமதிக்க வேண்டுமெனவும், அதிகாரிகளுக்கு பீகார் காவல் துறை டிஜிபி வினய் குமார் அறிவுறுத்தியுள்ளார். இத்துடன், பீகாரில் செயல்படும் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory