» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேட்டி

வியாழன் 6, மார்ச் 2025 12:38:03 PM (IST)

உ.பி., பிகாரில் மக்கள்தொகை அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தான், தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உலகில் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் வயது முதிர்ந்த மக்கள்தொகையுடன் போராடி வரும் நிலையில், மக்கள்தொகை பலன்களை நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு சொத்தாக அங்கீகரித்து, இப்போது தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புவதாகவும், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது எனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். 

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான். பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மக்கள் தொகை ஒரு பிரச்னையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அது வரவேற்கத்தக்க அறிகுறியாக தான் உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் முக்கியம் தான். ஆனால் நமக்குத் தேவையானது மக்கள்தொகை மேலாண்மை தான்.

மக்கள்தொகை பலன்களில் மிகப்பெரிய நன்மையை பெறும் ஒரு நாடு இந்தியா. மக்கள்தொகை மேலாண்மை மூலம் மக்கள்தொகை பலன்களைப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய நாயுடு, எதிர்காலத்திற்கான மக்கள்தொகைப் பலன்களை நாம் நிர்வகிப்பதன் மூலம் "இந்தியாவும் இந்தியர்களும் சிறந்தவர்களாக இருப்பார்கள்" என்றார்.

உலகளாவிய சமூகங்கள் தங்களுக்கான சேவைகளுக்காக இந்தியர்களான நம்மையைச் சார்ந்துள்ளன. இது அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல. தேசிய நலன் சார்ந்த விஷயம் என்று நாயுடு வலியுறுத்தினார். மேலும் மக்களவைத் தொகுதி சீரமைப்பு தொடர்பாகவோ, அதனை எப்படி கணக்கிடுவது என்பது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அனுமானங்கள் குறித்து கருத்து செல்ல முடியாது என்றார்.

மும்மொழிக் கொள்கை குறித்து நாயுடு கூறுகையில், "இப்போதெல்லாம், உலகளாவிய வாய்ப்புகளுக்காக அனைவரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல மொழி மையங்களை நிறுவுவது குறித்து ஊக்குவிக்கப் போகிறேன்" என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors






CSC Computer Education




Thoothukudi Business Directory