» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் கையால் எழுதிய 100 பக்க பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் ஓ.பி.செளத்ரி!

செவ்வாய் 4, மார்ச் 2025 12:50:27 PM (IST)



டிஜிட்டல் யுகத்தில் முழு பட்ஜெட்டையும் கையால் எழுதி, சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையையும் ஓ.பி.செளத்ரி பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் தொடரில், 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பி.செளத்ரி திங்கள்கிழமை தாக்கல் செய்தார். நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் உறுப்பினர்களுக்கு லேப்டாப், டேப் வழங்கப்பட்டு டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் பழைய முறைப்படி பேப்பரில் திங்கள்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் செளத்ரி. 100 பக்கங்கள் கொண்ட பட்ஜெட்டை அமைச்சர் செளத்ரியே மூன்று இரவுகள் இடைவிடாமல் செலவிட்டு எழுதியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓ.பி.செளத்ரி அளித்த பேட்டியில் "இது பாரம்பரியத்துக்கு திரும்புவதற்கும் உண்மைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும். டிஜிட்டல் யுகத்தில் கைகளால் எழுதப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்வது தனித்துவமான அடையாளத்தையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் இது ஊக்குவிக்கிறது” என்றார்.

2005 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஓ.பி. செளத்ரி. 22 வயதில் வெற்றிபெற்று இளம் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர். ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த செளத்ரி, 2018-ஆம் ஆண்டு பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவின் இணைந்தார். அந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். பின்னர், 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற செளத்ரி நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






CSC Computer Education

New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory