» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் தேர்தலை முன்னிட்டு சோதனை : ரூ.52 கோடி பொருட்கள் பறிமுதல்!

வெள்ளி 25, அக்டோபர் 2024 5:51:56 PM (IST)



மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாகன சோதனைகளில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மும்பை புறநகர், நாக்பூர் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் காவல்துறை, வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வு, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, சுங்கம் மற்றும் கலால் ஆகிய துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் இதுவரை 1,144 தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory