» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலை ரூ.16 அதிகரிப்பு: ரூ.1,980-க்கு விற்பனை!

திங்கள் 2, டிசம்பர் 2024 10:40:51 AM (IST)

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலை ரூ.16.5 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சென்னையில் சிலிண்டா் விலை ரூ.1,980- என விற்பனையாகிறது. 

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.

அந்த வகையில், தொடா்ந்து 5-ஆவது மாதமாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.16.5 உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வைத் தொடா்ந்து சென்னையில் வணிக சிலிண்டா் விலை ரூ.1,980-ஆகவும், மும்பையில் ரூ.1,771-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,927-ஆகவும் உயா்ந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை ரூ.172.5 உயா்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டா்களின் விலை இம்மாதமும் மாற்றமின்றி ரூ.803-ஆக தொடா்கிறது.

இதேபோல விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.1,318.12 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருளின் விலை சென்னையில் ரூ.95,231, தில்லியில் ரூ.91,856, மும்பையில் ரூ.85,861-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த நவம்பா் 1-ஆம் தேதி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2,941.5 உயா்த்தப்பட்ட நிலையில், தொடா்ந்து 2-ஆவது மாதமாக இம்முறையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory