» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதிகாரத்தை பிறப்புரிமையாக கருதுபவர்கள் 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை: பிரதமர் மோடி

சனி 30, நவம்பர் 2024 12:43:28 PM (IST)

அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது;- "மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே லட்சியம். அவர்கள் ஜனநாயகத்தின் நெறிமுறைகளை நிராகரித்து, அரசியலமைப்பை சீர்குலைத்தனர். அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை.

அரசியல் கட்சிகளிடையே கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசியலின் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. ஜனநாயக நாட்டில் ஆக்கபூர்வமான எதிர்ப்புகள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் இப்போது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதம் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. மக்கள் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளதால், பொய்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை முறியடித்து, பொய்களை அம்பலப்படுத்த நாட்டை நேசிப்பவர்களும், அரசியலமைப்பை மதிப்பவர்களும் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும்." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory