தூத்துக்குடி சுந்தரவேல்புரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் மதுரை வீரன் (60). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்டேட் பேங்க் காலனி கைலாஷ் மஹால் அருகே சாலையில் சென்று கொண்டிருந்து போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் உடனடியாக மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

