தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மத்தின். இவரது மகன் ரபீக் ராஜா (30). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கழுகுமலையிலிருந்து குமாரபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியதால், ரபீக் ராஜா சாலையில் சறுக்கி கீழே விழுந்தார்.

இந்தக் கொடூர விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்குப் போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரபீக் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் கழுகுமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.