தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் தங்கராஜ் (29). குடிப்பழக்கம் உடையவரான தங்கராஜ், கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக எவ்வித சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் தங்கராஜ், தனது வீட்டில் உள்ள தகர சீட்டின் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

