தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2027 பணியானது 12.11.2026 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், மற்றும் முகவரி மாற்றம் செய்திடவும் மனுக்கள் பெற்றிட 21.11.2026 (சனிக்கிழமை), 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை), 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 05.00 மணி முடிய மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 01.01.2027 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 31.12.2008 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரினை சேர்க்க படிவம்-6, பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7. ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்திட, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட மற்றும் வேறு சட்டமன்ற தொகுதியில் உள்ள பதிவினை தற்சமயம் வசிக்கும் முகவரிக்கு மாற்றம் செய்திடவும், மாற்றுதிறனாளி குறியீடு மற்றும் நகல் அடையாள அட்டை பெற்றிட படிவம்- 8 அளித்திட வேண்டும்.
மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ECINet என்கிற மொபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம்.
இந்திய தேர்தல் ஆணையமானது. வாக்காளர் பட்டியல் பார்வையாளராக
திருமதி ஆசியா மரியம், ஆணையர், சிறுபான்மையினர் நலம் அவர்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு 4.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்.
1950 ஐ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கை நமது மாவட்டத்தில் குறைவாக உள்ளதால், இளம் வாக்காளர்களை பெரும்வாரியாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

