திருநெல்வேலி சரகத்தில் பணியாற்றி வரும் 7 தாலுகா காவல் ஆய்வாளர்களை நிர்வாக வசதி கருதி உடனடியாக இடமாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்களின் விவரம்:
நெல்லை சரக அலுவலக காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகிதா அன்னா கிறிஸ்டி — தென்காசி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம்.
நெல்லை சரக காத்திருப்போர் பட்டியலில் இருந்த சைரஸ் — தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திற்கு மாற்றம்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை இன்ஸ்பெக்டர் M. மீனா — கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம்.
கோட்டார் இன்ஸ்பெக்டர் M. கண்ணன் — புதுக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் M. மாரியப்பன் — சூரங்குடி காவல் நிலையத்திற்கு மாற்றம்.
தூத்துக்குடி மத்திய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் G. பாஸ்கரன் — நாசரேத் காவல் நிலையத்திற்கு மாற்றம்.
நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் — சாயர்புரம் காவல் நிலையத்திற்கு மாற்றம்.
இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள் விடுவிக்கப்பட்ட தேதி மற்றும் புதிய பொறுப்பில் இணைந்த தேதியை தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் உடனடியாக நெல்லை சரக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

