திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 21 (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 22 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடைபெற்றன. இதில் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்துப் படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றின் கீழ் மொத்தம் 5,979 விண்ணப்பங்கள் நேரடியாகப் பெறப்பட்டுள்ளன.
இரண்டு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களின் நோக்கம் மற்றும் எண்ணிக்கை விவரம்:
• படிவம் 6 (புதிய வாக்காளர் சேர்ப்பு): 2,806 விண்ணப்பங்கள் (இவற்றில் 18 வயது பிரிவைச் சேர்ந்தவை 1,597 விண்ணப்பங்கள்).
• படிவம் 7 (பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்குதல்): 88 விண்ணப்பங்கள்.
• படிவம் 8 (குடியிருப்பு இடமாற்றம், வாக்காளர் பட்டியல் விவரத் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி விவரக் குறியீடு): 3,085 விண்ணப்பங்கள்.
சட்டமன்றத் தொகுதி வாரியான விண்ணப்ப எண்ணிக்கை:
• 224. திருநெல்வேலி: படிவம் 6 – 517, படிவம் 7 – 34, படிவம் 8 – 679 (மொத்தம்: 1,230).
• 225. அம்பாசமுத்திரம்: படிவம் 6 – 720, படிவம் 7 – 23, படிவம் 8 – 738 (மொத்தம்: 1,481).
• 226. பாளையங்கோட்டை: படிவம் 6 – 458, படிவம் 7 – 12, படிவம் 8 – 751 (மொத்தம்: 1,221).
• 227. நாங்குனேரி: படிவம் 6 – 556, படிவம் 7 – 6, படிவம் 8 – 453 (மொத்தம்: 1,015).
• 228. இராதாபுரம்: படிவம் 6 – 555, படிவம் 7 – 13, படிவம் 8 – 464 (மொத்தம்: 1,032).
முகாமில் பெறப்பட்டவை விண்ணப்பங்களின் எண்ணிக்கைகள் மட்டுமே என்றும், அவை சரிபார்ப்பு மற்றும் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்ட பின்னரே வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேவைகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

