திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (DHS) மூலமாக மாவட்டச் சித்த மருத்துவ அலுவலகம், உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வள்ளியூர் அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
தேசிய சுகாதாரக் குழுமத் (NHM) திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்:
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி / Ayush Medical Officer - Homeopathy): 1 பணியிடம்
2. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator): 1 பணியிடம்
3. நுண்ணுயிரியலாளர் (Micro Biologist): 1 பணியிடம்
• மொத்த காலிப்பணியிடங்கள்: 3
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால், இதன் மூலம் பிற்காலத்தில் நிரந்தரப் பணியோ, முன்னுரிமையோ அல்லது பிற சலுகைகளோ கோர இயலாது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை நெல்லை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 03.11.2026 முதல் 23.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலகம்,
எண். 16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு,
சமாதானபுரம், பாளையங்கோட்டை,
திருநெல்வேலி - 627002.
நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கடைசி நேரத்திற்குப் பிறகு (23.11.2026 மாலை 5 மணிக்கு மேல்) பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

