தூத்துக்குடியில் 62 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க திருநெல்வேலி லாலா மிட்டாய் கடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரம் மற்றும் சுவையுடன் கூடிய சிறப்பு இனிப்பு விற்பனை மற்றும் மொத்த ஆர்டர்கள் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

நிறுவனர் தொழிலதிபர் மயில்வாகனன் கருப்பசாமி அவர்களால் கடந்த 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடை, தூத்துக்குடி மக்களின் நாவில் இனிப்புச் சுவையைத் தந்து வருகிறது. தற்போது தூத்துக்குடி சத்திரம் பேருந்து நிறுத்தம், இன்னாசியார்புரம், மில்லர்புரம், அண்ணாநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் இயங்கி வருகிறது.

தலைமுறை தலைமுறையாக அதே பாரம்பரிய சுவை மாறாமல் தயாரிக்கப்படுவதால், தூத்துக்குடி மட்டுமின்றி திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதி மக்களின் முதன்மைத் தேர்வாக இக்கடை விளங்கி வருகிறது.

இந்தாண்டு தீபாவளிக்காக நெய் மைசூர்பாக், திருநெல்வேலி ஸ்பெஷல் அல்வா, பாதுஷா, லட்டு, ஜாங்கிரி, சோன் பப்டி, காஜு கட்லி, ஸ்பெஷல் மிக்ஸர், காரசேவு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் சுவையாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சுத்தமான நெய்யில், கலப்படமின்றி பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால், பொதுமக்கள் தங்கள் உறவினர்களுக்குப் பரிசாக வழங்கவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கவும் அதிகளவில் மொத்த ஆர்டர்களை வழங்கி வருவதாகக் கடை உரிமையாளர் நெல்லையம்மாள் தெரிவித்தார்.

மேலும், தற்போதே நாள் ஒன்றுக்கு 500 கிலோவுக்கும் மேல் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருவதாகவும், தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க விற்பனை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.