பெங்களூருவில் நடைபெறும் மத்திய மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணிக்காகக் களமிறங்கிய வைபவ், வெறும் 42 பந்துகளில் அதிரடியாக அரைசதம் கடந்தார்.
இதன் மூலம், தனது 15 வயது 175 நாட்களில் துலீப் கோப்பை வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இதற்கு முன், கடந்த 1969-ம் ஆண்டு லக்ஷ்மண் சிங் தனது 16 வயது 23 நாட்களில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
இப்போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வெறும் 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட போதிலும், அவரது இந்தத் திறமையான அதிரடி ஆட்டத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், போட்டியின் முதல் நாளில் கேப்டன் இஷான் கிஷனுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால், வைபவ் சூரியவன்ஷி சுமார் ஒரு மணி நேரம் தற்காலிக கேப்டனாகச் செயல்பட்டார். இதன் மூலம் உள்நாட்டு முதல்தரக் கிரிக்கெட் தொடரில் மிகக் குறைந்த வயதில் ஒரு அணியை வழிநடத்திய இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

