தூத்துக்குடி சாமுவேல் புரத்தைச் சேர்ந்தவர் முத்து கருப்பன் மகன் ஆறுமுகசாமி (63). இவர் தனது வீட்டின் முன்பு சிறிய அளவில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார். ஆறுமுகசாமி தினமும் மதுபானம் குடித்துவிட்டு வந்ததால் அவரது மகள் அவரைச் சத்தம் போட்டதாகத் தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆறுமுகசாமி, வீட்டின் உள்ளே சென்று தன் உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீவைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைநத அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆறுமுகசாமி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.