தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் சுற்றுச்சூழலுக்கு சிறிதும் பாதிப்பு இல்லாத பசுமை தாமிர ஆலையாக திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அருகே அமைந்துள்ள சோரீஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பசுமை தாமிர ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்கள் கிராமத்துடைய வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு தொழில்கள் நடைபெறாமலும் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தங்களுக்கு மழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு நேரங்களில் பல்வேறு உதவிகளையும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது. எனவே இந்த ஆலையை பசுமை காப்பர் முறையில் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

