தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியான அருள்ராஜ் மருத்துவமனை அருகிலுள்ள 'நம்ம தூத்துக்குடி' முன்பாக சுமார் 60 வயது முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அந்த முதியவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. உயிரிழந்த முதியவருக்குச் சுமார் 60 வயது இருக்கும். அவரது தலையின் வலது பக்கத்தில் பழைய காயத்திற்காகத் தையல் போடப்பட்டுள்ளது. ஆனால், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
இதனையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகவும், அடையாளம் காண்பதற்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

