தூத்துக்குடி ஒய்.எம்.சி.ஏ சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவிற்குத் தூத்துக்குடி ஒய்.எம்.சி.ஏ தலைவர் வழக்கறிஞர் ஆர். ஸ்டான்லி வேதமாணிக்கம் தலைமை தாங்கினார். பொருளாளர் சார்லஸ் சுந்தர்சிங் ஆரம்ப ஜெபம் செய்தார்.
நிர்வாகக் குழு உறுப்பினர் ஜாய் பெல், ஆசிரியைகள் மார்கரேட், தங்கம் மற்றும் பேராசிரியை பெனடிக்டா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். பேராசிரியர் ஜான் பிரின்ஸ் அறிமுகவுரை ஆற்றினார். செயலாளர் ராபர்ட் போட்டி விதிமுறைகளை விளக்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தனேஷ் மற்றும் பத்திரிகையாளர் சீனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நட்டாத்தி ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், அன்னை நகைக்கடை மேலாளர் மனோகர், தூத்துக்குடி வர்த்தக சபை பொதுச்செயலாளர் பிரேம் பால் நாயகம், நிலா சீ புட்ஸ் அபிதா பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். ஒய்.எம்.சி.ஏ நிர்வாகக் குழு உறுப்பினரும் முன்னாள் தலைமை ஆசிரியருமான ஜேக்கப் மனோகர் மற்றும் பேராசிரியர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஓவியம், பேச்சு, பாடல், நடனம் மற்றும் ஃபேஷன் பரேட் ஆகிய போட்டிகளின் முடிவுகளை வ.உ.சி. கல்லூரிப் பேராசிரியர் ஜாக்சன் அறிவித்தார்.
இதில், 'மிஸ் ஒய்.எம்.சி.ஏ' ஆக விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி ஆயிஷா ராயாவும், 'மிஸ்டர் ஒய்.எம்.சி.ஏ' ஆக விகாசா பள்ளி மாணவன் இஷான் வில்லியம் கொரைராவும் தேர்வு செய்யப்பட்டு கேடயம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர். மேலும், போட்டிகளில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

