கடந்த 2015-ம் ஆண்டு முத்தையாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அத்திமரபட்டி விலக்கு பகுதியில், அத்திமரபட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் மாடசாமி (எ) கோபால் (55) என்பவர் முன்விரோதம் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கு குறித்து முத்தையாபுரம்ப் போலீஸார் விசாரணை நடத்தி, தூத்துக்குடி முக்காணி பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி (எ) வீரபுத்திரனின் மகன்களான மல்லி (எ) மலையாண்டி (38), முத்து (எ) பழைய முத்து (42) மற்றும் அய்யாதுரை (எ) பூவன் மகன் மாரியப்பன் (எ) முண்டன் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி ADJ - II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (05.10.2026) நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், எதிரிகளான மல்லி (எ) மலையாண்டி, முத்து (எ) பழைய முத்து மற்றும் மாரியப்பன் (எ) முண்டன் ஆகிய 3 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்குத் தலா ஆயுள் தண்டனை மற்றும் மொத்தம் 17,500/- அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.