தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு ஒன்றியத் தலைவர் ராமர் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொதுச்செயலாளர் வேல்ராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் நீதிபாண்டியன், மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், அரசு தொடர்பு பிரிவு வடக்கு மாவட்டத் தலைவர் லட்சுமணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, கிராமங்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்திச் சிறப்புரையாற்றினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், கிருஷ்ணன், சுடலைமணி, கல்விப் பிரிவு மாவட்டத் தலைவர் மருதையா, விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவர் ஆதி நாராயணன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளர் பகவதி, இளைஞர் அணி ஒன்றியத் தலைவர் மாரிச்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.