தூத்துக்குடி கோட்ட அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் 3-வது கோட்ட மாநாடு கௌரி சங்கர் ஹோட்டல் சித்ரா லாட்ஜ் அரங்கில் நடைபெற்றது.
மாநாட்டிற்குச் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் ஜெயகரன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் மனோகர் தேவராஜன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஜெபகுமார் ஈராண்டுச் செயல்பாட்டு அறிக்கையையும், நிதிச் செயலாளர் முத்துமாலா வரவு செலவு கணக்குகளையும் சமர்ப்பித்தனர்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாகச் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் சண்முகசுந்தரராஜ், மாநில உதவித் தலைவர் சுப்பையா மற்றும் கோவில்பட்டி கோட்டச் செயலாளர் தவமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும், நிர்வாகிகள் சொர்ணமாணிக்கம், மைக்கேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக ஜெயராஜ் ஜெயகரன், செயலாளர் ஜெபகுமார், நிதிச் செயலாளர் முத்துமாலா ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். செயல் தலைவராக சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
மாநாட்டில் அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களைப் பாதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 'வேலிடேஷன் சட்டம் 2025'-ஐ முற்றிலுமாக நீக்க வேண்டும்.
8-வது ஊதியக் குழுவில் ஓய்வூதியர்களுக்கான அனைத்துப் பலன்களும் முறையாக அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஓய்வூதியர்களின் நலன் சார்ந்த 12 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் 80 வயதிற்கு மேற்பட்ட மிக மூத்த ஓய்வூதிய உறுப்பினர்களுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது. இதில், திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, செயல் தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

