தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்த முருகேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் பிறப்பித்துள்ளார். முருகேசன் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் ஜான்சன், தாளமுத்து நகர் காவல் நிலையத்தின் புதிய தனிப்பிரிவு காவலராக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலா (எ) பாலமுருகன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் நிர்வாகக் காரணங்களின் பின்னணியிலேயே தனிப்பிரிவு காவலர் முருகேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.