தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்காக மொத்தம் 5,143 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். 18 மையங்களில் 4,047 பேர் தேர்வை எழுதினர். 1,096 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 79 சதவீதம் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளதாகவும், 21 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை.தேர்வு மையங்களுக்கு வந்த தேர்வர்கள் அனைவரும் காவல்துறையினர் மற்றும் கண்காணிப்பாளர்களின் கடும் சோதனைக்குப் பின்னரே தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி, காலை சரியாக 8.59 மணிக்குத் தேர்வு மையங்களின் பிரதான நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

