தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், செயற்பொறியாளர் நகர் கோட்டம், நகர் வடக்கு உபகோட்டம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டுப் பேரிடர் மேலாண்மை முன்ஏற்பாடாக அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.

மேலும், பருவமழை காலத்தில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தூத்துக்குடி கிழக்கு காமராஜ் நகர் மற்றும் காலவாசல் பகுதிகளில் நீர்வழித்தடங்களில் உள்ள மின்பாதைகளை மாற்றிப் புதிய மின்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

இப்பணிகளில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட அலுவலர்கள் மற்றும் மதுரையிலிருந்து வரும் சிறப்புக் குழுவினர், பணியாளர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இப்பணிகள் காரணமாக சிலுவைப்பட்டி தாளமுத்து நகர் தாய் நகர் கிழக்கு காமராஜ் நகர், இராஜபாளையம், லூர்தம்மாள்புரம், கீழ அலங்காரத்தட்டு மேட்டுப்பட்டி, திரேஸ்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.