தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) உளவியல் துறை சார்பில் “Click, Connect, Create – Building Digital Skills for a World of Endless Possibilities” என்ற தலைப்பிலான டிஜிட்டல் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி முள்ளக்காட்டில் நடைபெற்றது.
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (CDP), உன்னத் பாரத் அபியான் (UBA) மற்றும் முதுநிலை உளவியல் துறை இணைந்து, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு 4 (SDG 4 - தரமான கல்வி) என்ற நோக்கத்தின் கீழ் இந்நிகழ்ச்சியை 28.10.2026 அன்று நடத்தின. இதில் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 20 நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துதல், டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் மற்றும் புதிய கற்றல் வாய்ப்புகளை அறிந்துகொள்ளுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இப்பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை உளவியல் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெய பாரதி வழிகாட்டுதலுடன், UBA மற்றும் CDP பொறுப்பாளர் ஆரோக்கிய காட்சியா ரொமினா தலைமையில், இரண்டாம் ஆண்டு இளநிலை உளவியல் மாணவத் தன்னார்வலர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறக் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சி. ஷிபானா, செயலர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் அருட்சகோதரி எம். எஸ். எழிலரசி, SSC இயக்குநர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் CDP–UBA ஒருங்கிணைப்பாளர் எஸ். புலோமின் ரெஜி ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
டிஜிட்டல் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதன் மூலம் தனிநபர் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

