தூத்துக்குடியில் கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையங்கோட்டை ரோடு பகுதியில் உள்ள ஒரு பூங்கா வாசல் முன்பு தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் நமச்சிவாய ராஜ் (55) என்பவரை முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மணி நகரைச் சேர்ந்த முத்துராஜ் மகன் ஆல்பர்ட் சந்திரபோஸ் (51/26) என்பவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு ADJ - I நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி தாண்டவம் இன்று (05.10.2026) ஆல்பர்ட் சந்திரபோஸ் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

