தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை பிரகாஷ் நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை ராஜீவ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (26) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.