இது தொடர்பாக பாஜக விவசாய அணி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி - பழையகாயல் - மஞ்சள் நீர்காயல் - சிதம்பரனார் நகர் - அம்பேத்கார் நகர்- புதுசுப்பிரமணியபுரம் - வேதமாணிக்கபுரம் - இருவப்பபுரம் (MIDR43S / SH77) - மனக்காடு - சிவத்தையாபுரம் - ஏரல்
மற்றும் தூத்துக்குடி - புதுக்கோட்டை - கூட்டாம்புளி - போடம்மாள்புரம் - பேய்க்குளம் - இருவப்பபுரம் - பெரும்படை சாஸ்தா கோவில் - கரையடியூர் - ஆறுமுகமங்கலம்- ஏரல் ஆகிய இரண்டு வழித்தடங்களில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பேருந்து வசதி இல்லாமல் உள்ளது.
இதனால் 25-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பள்ளி மாணவர்கள்.பெண்கள். தினமும் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். விவசாய விளைப் பொருட்களை தூத்துக்குடி சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைகிறார்கள்.
எனவே, மேற்கண்ட இரண்டு வழித்தடங்களிலும் உடனடியாக கள ஆய்வு செய்து, புதிய அரசு நகரப் பேருந்துகளை (காலை 7 மணி. மதியம் 1 மணி. மாலை 5:30 மணி) இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், திருவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஆகியோருக்கும் மனு அனுப்பியுள்ளார்.

