கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் இம்முறை முதல் பரிசாக ரூ. 30 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 500 ஆகும். கடந்த மாதம் தொடங்கப்பட்ட டிக்கெட் விற்பனை, கடைகளுக்கு வந்த முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் வரை 59 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் இதுவரை கேரள அரசுக்கு ரூ. 230 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.மொத்த பரிசுத் தொகையாக ரூ. 125.54 கோடி வழங்கப்படவுள்ளது. இது தவிர, முகவர்களுக்கான கமிஷன் (Agency Commission) தொகையாக ரூ. 12.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி லாட்டரி குழுக்கல் நடைபெறவுள்ளது. வழக்கமாகக் குழுக்கலுக்கு முந்தைய கடைசி சில நாட்களில் டிக்கெட் விற்பனை மேலும் சூடுபிடிக்கும். தற்போது குழுக்கலுக்கு இன்னும் 17 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.